இது நியாயமா? இறந்தபிறகு இப்படி சொல்றீங்களே! அடுக்கடுக்காக பல குற்றசாட்டுகளை வைத்த நடிகை சித்ராவின் மாமனார்!

இது நியாயமா? இறந்தபிறகு இப்படி சொல்றீங்களே! அடுக்கடுக்காக பல குற்றசாட்டுகளை வைத்த நடிகை சித்ராவின் மாமனார்!


hemanth-father-complaint-about-chitra

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  

இந்நிலையில்  நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஹேமந்த் தூண்டுதலால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் சித்ராவின் சொந்த விஷயங்கள் குறித்த பல தகவல்கள் பரவி வருகிறது.

chitra

இந்த நிலையில் ஹேம்நாத்தின் தந்தையும், சித்ராவின் மாமனாருமான ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், சித்ரா 3  நபர்களை காதலித்துள்ளதாகவும், அவருக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ராவுடன் டேட்டிங் சென்று நெருக்கமான வீடியோவை வைத்து அவரை மிரட்டியதாகவும் சமூகவலைத்தளங்கள் மூலம் அறிந்தேன். அதுமட்டுமல்லாமல் பல  அரசியல்வாதிகள் அவரிடம் நாள்தோறும் தொலைபேசியில் பேசியதாகவும் தகவல்கள் வருகிறது.

மேலும் சித்ரா அவ்வப்போது ஒரு சில போன்கால் வந்தால் பதற்றத்துடன் தனியாக சென்று பேசுவார் எனவும் பின் அந்த நம்பரை உடனே அழித்துவிடுவார் எனவும் என் மகன் ஹேமந்த்  கூறியிருக்கிறார். எனவே சித்ராவை யாராவது மிரட்டியிருக்கலாம். அந்த நபர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும் சித்ராவின் குடும்பத்தினர் கடைசியாக திருவான்மியூரில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது குறித்தும், ஆடி கார் வாங்கியது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் சித்ரா இறந்தபிறகு இப்படி குற்றம் சாட்டுகிறீர்களே! என குமுறுகின்றனர்.