மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

ஆண்களே! அந்த விஷயத்தில் குதிரை பலம் வேண்டுமா? அப்போ கட்டாயம் இதெல்லாம் சாப்பிடுங்க!

Summary:

Health benefits of murungai keerai

ஆண்களே குதிரைப்பலம் வேண்டுமா? அப்போ இதை சாப்பிடுங்கள், அதை சாப்பிடுங்கள் என பலவிதமான விளம்பரங்களை பார்த்திருப்பிகள். தயவு செய்து கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்.

பொதுவாக ஆண்களின் வீரியம் என்பது அவர்களின் இரத்த ஓட்டத்தில் தான் உள்ளது. புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியாவது, சரியான அளவிலான இரத்த ஓட்டம் இவைதான் உங்களின் ஆண்மையை தீர்மானிக்கிறது. உடலில் சீரான அளவு இரத்த ஓட்டம் இல்லையெனில் உங்கள் உடல் உறுப்புகள் சரிவர இயங்காது.

நீங்கள் உண்ணும் உணவிற்கும் உங்கள் இரத்த ஓட்டத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. நாம் உண்ணும் உணவுகள் மூலமே இந்த பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

1.முருங்கை கீரை,பருப்பு,முட்டை ஆகியவற்றை சேர்த்து,சமைத்து சுமார் 40 நாட்கள் தொடர்ந்து ஏதேனும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால்,உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

2.தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பொண்ணாங்கன்னி கீரையை மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்,உடலில் புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியாவது மட்டுமல்லாமல்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

3.ஒரு வகையில் புதினாவை மூலிகை உணவு என்று கூட கூறலாம்.வெண்ணீரில் புதினாவை கொதிக்க வைத்து,பின் அதனை வடிகட்டி,தினமும் காலையிலும்,மாலையிலும் குடித்து வந்தாலே இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

4.அரக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து,தினமும் காலையிலும்,மாலையிலும் சாப்பிட்டு வந்தாலே,உடலில் புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியாகும்.

5.தினசரி,ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை சாப்பிட்டு வந்தாலே!உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகிவிடும்.

6.தினமும் ஒரு துண்டு பப்பாளியை சாப்பிட்டு,அதன் பின் ஒரு டம்லர் பால் குடித்து வந்தால்,உடலில் இரத்தம் அதிகரிக்கும்.உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் மற்றும் கற்பினி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

7.தினசரி, 2அல்லது 3 அத்திப்பழத்தினை சாப்பிட்டு வந்தாலே இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.மேலும் ஒரு டம்லர் பாலுடன் சேர்தது அத்திப்பழத்தினை சாப்பிட்டு வந்தால்,ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


Advertisement