டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. சேவையை நிறுத்தும் முக்கிய நிறுவனம்..!!



HBO stopped his channel service in Disney+ hotstar

டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் இயங்குதளம் மூலமாக பலரும் தங்களின் பிராந்திய மொழிகளில் பல்வேறு தரப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை கண்டுகளித்து வருகின்றனர். 

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் முதல் திரையில் வெளியாகும் திரைப்படங்கள் வரை என அடுத்தடுத்த படங்களை ஓடிடி தளங்கள் வாங்கி குவித்து வருவதால், இதற்கான பயனர்களும் தொடர்ந்த அதிகரித்து வருகின்றனர். 

Latest news

இந்த நிறுவனங்கள் பல தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன. இந்த நிலையில், HBO நிறுவனம் நடப்பு மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் தனது சேவையை ஹாட்ஸ்டாருக்கு வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியஸ்களை நாங்கள் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு வழங்க மாட்டோம் என HBO தலைமை அறிவித்துள்ளது. 10 மொழிகளில் தனது சேவை வழங்கி HBO-வுக்கு இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.