சினிமா

என்னதான் இருக்கு அங்க? காஜல், வேதிகா, சமந்தாவை தொடர்ந்து இப்போ ஹன்சிகா! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!

Summary:

நடிகைகள் காஜல், டாப்ஸி, வேதிகா ரகுல் பிரீத் சிங், சமந்தாவை தொடர்ந்து தற்போது ஹன்சிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை  தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் அடுத்ததாக எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

கொழுகொழுவென பப்ளியாக இருந்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். நடிகை ஹன்சிகா  இறுதியாக தனது 50வது படமான மஹாவில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் நடிகை ஹன்சிகா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதற்கு முன் நடிகைகள் டாப்ஸி,காஜல் அகர்வால், வேதிகா, ரகுல் ப்ரீத் சிங்க், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு  சுற்றுலா சென்று ஏராளமான விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த நிலையில் ஹன்சிகா தற்போது தனது கடல் பிளைட் பயணத்தை பற்றி குறிப்பிட்டு தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement