'தமிழ்விதியெனசெய்' - ட்விட்டர் மூலம் தமிழ் புரட்சியில் களமிறங்கிய ஜி.வி



gvprakaahkumarsignsattamil

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சினிமாவில் மட்டுமல்லாது பல சமூக நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். மேலும் தனது தமிழ் பற்றை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதில் மட்டுமல்லாது தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் மட்டுமே தற்போது நிறைய படங்கள் முடிந்து வெளியீட்டிற்க்கு தயாராகி வருகிறது.

gv prakash

இவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்தின்  மீதும் அக்கரை கொண்டவராக அவ்வபோது காட்டி வருகிறார். ஜல்லிகட்டு பிரச்சனை, நீட் எதிர்ப்பு என பல சமயங்களில் தனது சமூக நிலைபாட்டை வெளிப்படையாக கூறிவருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில். 'உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்...இனி  புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ..." என கூறி தனது தமிழ் கையெழுத்தையும் போட்டுள்ளார்.