என் வாழ்க்கையின் முக்கியமான நாள்.! சந்தோஷத்தில் திக்குமுக்காடும் ஜிவி பிரகாஷ்! என்ன ஸ்பெஷல் தெரியுமா??gv-prakash-got-national-level-best-music-director-award

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் அவரது பாடல்களுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.

ஜிவி பிரகாஷ் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திலும் இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு இவரது இசையும் பெரும் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இன்று 2020 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள்  அறிவிக்கப்பட்டது. சூரரைப்போற்று படத்துக்கு இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷ்க்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு நாள் நீ பெரிதாக உருவாக்குவாய், ஒரு நாள் நீ வெற்றிபெறுவாய், ஒரு நாள் நீ வேண்டும்படி எல்லாம் நடக்கும் என சொன்னார்கள். நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தற்போது அந்த நாள் வந்துள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி. எனது தந்தை வெங்கடேஷ்க்கு பெரிய நன்றி.

எனது முழு குடும்பத்தினருக்கும்.. சைந்தவி,  தங்கை பவானி, மகள் அன்வி என அனைவருக்கும் நன்றி.  சூரரைப் போற்று படக்குழுவுக்கு மிகபெரிய நன்றி. இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா சார், ராஜசேகர் பாண்டியன் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி. எனது இசைக்குழுவினருக்கு ஸ்பெஷல் நன்றி. என் வாழ்வின் முக்கியமான நாள் இது. அன்புடன் ஜிவி என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.