இனி ஒரே கலக்கல்தான்! ஜிவி பிரகாஷ்க்கு அடித்த செம ஜாக்பாட்! என்னனு தெரியுமா??

இனி ஒரே கலக்கல்தான்! ஜிவி பிரகாஷ்க்கு அடித்த செம ஜாக்பாட்! என்னனு தெரியுமா??



Gv prakash going to make music in Bollywood movies

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து, தனது இனிமையான பாடல்களால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். அனைவரும் ரசிக்கும் வகையில் ஏராளமான பாடல்களை கொடுத்து வந்த ஜிவி பிரகாஷ் பின் நடிகராக களமிறங்கி சிறந்து விளங்கி வருகிறார்.

ஜி.வி பிரகாஷ் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து அசத்தலாக நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். நடிகரான பிறகும் அவர் இசைத்துறையிலும் பெருமளவில் கவனம் செலுத்தி அடுத்தடுத்ததாக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது அடுத்த கட்டமாக பாலிவுட் சினிமாவிலும் இசையமைப்பாளராக கலக்க உள்ளார்.

gv prakash

அதாவது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்து தமிழில் சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ் இந்தியில் இசையமைப்பாளராக களமிறங்க உள்ளாராம். மேலும் அதனை தொடர்ந்து அவர் ராஜ்குமார் கிராணி ஷாருக்கானை ஹீரோவாக வைத்து இயக்கும் டங்கி என்ற படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.