சினிமா

தல அஜித்தின் 61வது படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்! நடக்குமா? ரசிகரின் கேள்விக்கு பிரபல நடிகர் கூறிய மாஸ் பதில்!

Summary:

Gv prakash answered about ajith 61 movie

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.  இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் தடைவிதிக்கப்பட்ட நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அஜித்தின் 61வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது அஜித் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். அப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஜிவி பிரகாஷிடம்  அஜித்- சுதா கொங்கரா மூவி நடக்குமா? என கேட்ட நிலையில், அவர், செம்ம ஸ்கிரிப்ட் அது. நடந்ததுனா செம்மையா இருக்கும். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் . சுதா அந்த ஸ்கிரிப்ட் பத்தி என்கிட்ட சொல்லிருக்காங்க. அது நடந்தால் நல்லாயிருக்கும் என கூறியுள்ளார். 


Advertisement