குட் நைட் பட நடிகைக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா.? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!

குட் நைட் பட நடிகைக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா.? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!



good-night-movie-actress-meethas-engagement-photos-vira

தமிழில் முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். அதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான குட் நைட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் மழலை கொஞ்சும் முகம், சுருள் முடி, கரகர குரல், தேர்ந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தந்தது.

குறைவான பட்ஜெட்டில் உருவான குட் நைட் திரைப்படம் எதிர்பார்த்ததை விட வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்தது. இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் பலர் நடித்திருந்தனர். மேலும் குட் நைட் திரைப்படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படத்தில் ஒன்றாக கருதப்படுகிறது.

Good night movie

இந்நிலையில் இப்படத்தில் நடிகையாக நடித்திருந்த மீதாவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மீதாவின் சொந்த ஊரான ஊட்டியில்தான் இவர்களது திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. தன் வருங்கால கணவருடன் இவர் எடுத்துள்ளப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.