என்ன ஒரு ஆட்டம்! தியேட்டரில் ஆண்களை மிஞ்சிய பெண் தல ரசிகைகள்; வைரல் வீடியோ

என்ன ஒரு ஆட்டம்! தியேட்டரில் ஆண்களை மிஞ்சிய பெண் தல ரசிகைகள்; வைரல் வீடியோ


girls dancing in theatre for viswaasam

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவா. 

அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களுடன் நிறைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் இது என்றும் புகழ்ந்து வருகின்றனர். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், சுமைகளை அவர்கள் மேல் சுமத்தாமல் எப்படி காக்க வேண்டும் என இயக்குனர் தெளிவாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ரசிகர்களை கண் கலங்க வைக்கும் அளவிற்கு அஜித் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Viswaasam

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அஜித் ரசிகர்களாகவே உள்ளனர். அஜித் படம் வெளியாகிறது என்றால் அவர்கள் அனைவருக்கும் திருவிழா தான். வானுயர கட்டவுட்டுகள், தாரை தப்பட்டைகள் என இளைஞர்கள் அமர்க்களப்படுத்தி விடுபடுவர். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த முறை ஆண்களுக்கு இணையாக பெண் ரசிகைகளும் தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று வெளியான விஸ்வாசம் படமானது சில திரையரங்குகளில் பெண்களுக்கான சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் படத்தினை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இதில் சில பெண்கள் ஒருபடி மேல் சென்று ஆண்களைப்போலவே திரைக்கு முன் நடனமாட துவங்கிவிட்டனர். திரையரங்கில் அவர்கள் போடும் ஆட்டம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.