நடிகர் அர்ஜுனை தொடர்ந்து #MeToo வில் சிக்கும் பிரபல நடிகரின் தந்தை! யார் தெரியுமா?

நடிகர் அர்ஜுனை தொடர்ந்து #MeToo வில் சிக்கும் பிரபல நடிகரின் தந்தை! யார் தெரியுமா?


Girl raised complaint against to director thiyagarajan MeToo

நடிகர் பிரசாந்தின் அப்பாவும் இயக்குனருமான தியாகராஜன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பொன்னர் - சங்கர் என்ற திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்கினார். இதில் அவரது மகன் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு இயக்குனர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமுக வலைத்தளத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

Ponnar sankar

 பொன்னர் சங்கர் திரைப்படத்தில் தான் போட்டோகிராபராக பணிபுரிந்ததாகவும் அப்போது இயக்குனர் தியாகராஜன் தன்னிடம் வந்து தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் அவர் காட்டியதாகவும், மேலும் அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் தன்னிடம் கூறியதாகவும் பிரித்திகா மேனன் தெரிவித்துள்ளார். 

Ponnar sankar

மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டியதாகவும் இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.