உலகம் வீடியோ

உயர் அதிகாரியை தாறுமாறாக வெளுத்து விளாசிய பெண்!அப்படியென்னதான் நடந்தது?? வெளியான அதிர வைக்கும் வீடியோ!

Summary:

சீனாவில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண்ணிற

சீனாவில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த நிலையில் பொங்கியெழுந்த பெண் அவரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுஹூவாவின் பெய்லின் மாவட்டத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கு அவரது உயர் அதிகாரி ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மிகவும் மோசமான மெசேஜ்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வந்த பிரச்சனையால் பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பெண் புத்தகங்களையும், தண்ணீரையும் அவர் மேல் வீசி தாறுமாறாக தாக்கியுள்ளார்.

பின்னர் தரை துடைக்கும் கட்டையால் சரமாரியாக தாக்கி கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் அவர் மீது வீசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த உயரதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சீன பெண்ணிய ஆய்வாளரான லு பின் கூறுகையில், நீதிமன்றம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டு வரவில்லையென்றால் இப்படிதான் பெண்களின் கோபம் வெளிவரும். பல நேரங்களில் பெண்கள் இது போன்ற பிரச்சினையை அமைதியாக கடந்து விடுகின்றனர். ஆனால் இந்த பெண் இப்படி உயர் அதிகாரியை தாக்கியுள்ளார் என்றால் அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.


Advertisement