சினிமா

ஆள் அடையாளம் தெரியாமல் பயங்கர மாடர்னாக மாறிய கில்லி பட விஜய் தங்கை! புகைப்படம் இதோ!

Summary:

Gilli movie fame nancy jennifer current photos

விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கில்லி. இன்றுவரை பல விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான விஜய் நடித்த படங்களில் கில்லி படமும் ஓன்று. விஜய், த்ரிஷாவின் எதார்த்தமான நடிப்பு, ப்ரகாஷிராஜின் மிரட்டலான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம்.

கில்லி படத்தில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் நடிகர் விஜய்யும் அவரது தங்கையும் இந்த படத்தில் சேர்ந்து செய்யும் நகைச்சுவையும் ஓன்று. அண்ணன் தங்கைக்குள் நடக்கும் சிறு சிறு நகைச்சுவையான சண்டை காட்சிகளை எதார்த்தமாக காட்டியிருப்பார்கள்.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஜெனிபர். கிழக்கு கடற்கரை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கில்லி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் ஹீரோயின் அளவிற்கு நெடுநெடுவென வளர்ந்து பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் ஜெனிபர். சமீபத்தில் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த இவரின் தற்போதைய புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement