சினிமா

வாவ்! என்னவொரு ஹேப்பி! தனது முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய நடிகை ஜெனிலியா! வைரலாகும் வீடியோ!

Summary:

Genelia talk with siddharth in video call

கொரோனா ஊரடங்கால்  படப்பிடிப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் முடங்கியிருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்கள், திரைப்படங்கள் தொடர்பான அழகான நினைவுகளை சமூகவலைதளத்தில் தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா தனது முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பாய்ஸ். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் மூலம் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் ஆகியோர் அறிமுகமானார்கள். மேலும் இதில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடிகை  ஜெனிலியா நடித்திருந்தார். இந்த ஜோடி இணைந்து தெலுங்கில்  ஏராளமான படங்களில் நடித்துள்ளது. அதில் ஒன்றுதான் பொம்மரிலு. இந்த படம் தமிழில் ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா நடிப்பில் சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற பெயரில் ரீமேக்கானது. 

இந்நிலையில் பொம்மரிலு திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் ஜெனிலியா இருவரும் வீடியோகாலில் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோவை நடிகை ஜெனிலியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

 

 


Advertisement