"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அட அட.. வேற லெவல் டைட்டில்! யாரும் இப்படி யோசிக்க மாட்டாங்க! கௌதம் மேனன்- சூர்யா படத்தோட தலைப்பை பார்த்தீர்களா!!
ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாக தொடங்கிய பின்பு ஆந்தாலஜி வெப்தொடர்கள் இயக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அதாவது பல இயக்குனர்கள் தனித்தனியாக குறும்படங்களை இயக்கி அதனை ஒன்றாக இணைத்து ஆந்தாலஜி வெப் தொடராக வெளியிடுகின்றனர். இந்த நிலையில் மணிரத்னம் கியூட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி வெப்தொடர் நவரசா. இதில் கோபம்,சோகம்,மகிழ்ச்சி உள்ளிட்ட ஒன்பது நவரசங்களின் அடிப்படையில் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை கௌதம் மேனன், ஹலிதா சமீம், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், பிஜாய் நம்பியார், ரவீந்திரன், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம், ஆர் பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். மேலும் இதில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், கௌதம் கார்த்திக், ரோபோ சங்கர் நித்யாமேனன், பூர்ணா, விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அசோக்செல்வன், ரித்விகா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் கதையில் சூர்யா நடிக்கிறார். இதற்கு கிடார் கம்பி மேலே நின்று என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி படத்திற்கு பெயர் வைப்பதில் வல்லவர். வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், நீ தானே என் பொன்வசந்தம், வாரணம் ஆயிரம் என இவரது படங்களின் தலைப்புகள் அனைத்தும் வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் அவர் தற்போது தனது ஆந்தாலஜி தொடருக்கும் வித்தியாசமாகவும், தனித்தும் தலைப்பு வைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.