சினிமா

என்னது.. ஆடுகளம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிச்சது இவரா! எந்தெந்த சீனில் நடிச்சிருக்காரு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி செ

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி செம பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில், தற்போது முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக டாப்ஸி நடித்திருந்தார். 

இது தமிழில் டாப்ஸிக்கு முதல் படமாகும். இப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் சேவல் சண்டையை மையமாக கொண்டு உருவான இந்த படம் 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதை வென்றது. ஆனால் இந்த படத்தில் டாப்ஸிக்கு முன்பு ஹீரோயினாக நடிக்கவிருந்தது நடிகை திரிஷாதானாம். 

 தனுஷுடன் த்ரிஷா

அதாவது ஆடுகளம் திரைப்படத்தில் ஒப்பந்தமான த்ரிஷா தனுசுடன் சில காட்சிகளிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் திடீரென படத்திலிருந்து விலகி விட்டாராம். இந்நிலையில் ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்த சில காட்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 ஆரம்பத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தில் ஐரீன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த த்ரிஷாவின் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தில் ஐரீனாக டாப்ஸி நடித்திருந்தார். ஆனால் நடிகை ஷ்ரேயா சரண் மற்றும் த்ரிஷா ஆகியோர் இந்த பாத்திரத்திற்கான முதல் தேர்வாக இருந்தனர்.

 ஆடுகளம் படத்தில் த்ரிஷா இடம்பெற்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement