சினிமா

தனது முதல் பட சம்பளத்தை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த நடிகர் விக்ரமின் மகன்...!

Summary:

first-salery-keral-flood-relief-thuruv

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகன் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். அவரது பெயர் துருவ். தற்போது துருவ் நடிக்கும் படத்தின் பெயர் "வர்மா". இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் அருஜுன் ரெட்டி என்ற பெயர் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படம் தமிழில் எடுத்துக்கொண்டு இருக்க, அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விக்ரமின் மகன் தனது முதல் படத்தின் சம்பளம் முழுவதையும் கேரளா வெள்ளத்திற்கு கொடுத்துள்ளார். 

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் தன்னுடைய முதல் படத்தின் சம்பளம் முழுவதையும், இந்த படத்தின் தயாரிப்பாளர் முகேஷுடன் சென்று கேரளா முதலமைச்சர் பினராயி அவர்களை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தியை கண்டதும் பலரும் துருவ்விற்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கின்றார்கள். 


Advertisement