சினிமா

வசூலில் புதிய சாதனை படைத்த 2.0! வெளியான அதிகாரபூர்வ தகவல்!

Summary:

First 500 crore collection tamil movie

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் அணைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது 2.0 திரைப்படம்.

ஆரம்பத்தில் இருந்தே பல சாதனைகள் செய்து வருகிறது 2.0 திரைப்படம். இதற்கு முன்னர் சர்க்கார் திரைப்படம் சென்னையில் முதல்நாள் வசூலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை 2.0 திரைப்படம் முறியடித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை இல்லாதா அளவிற்கு எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை 2.0 திரைப்படம் செய்துள்ளது. 500 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிசில் புது சாதனை படைத்துள்ளது  2.0 திரைப்படம்.  2.0 திரைப்படம் 500 கோடியை தாண்டி விட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 


Advertisement