தனது மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை பரீனா.! அதுவும் எங்கு பார்த்தீர்களா!! வைரல் வீடியோ!!farina-celebrate-his-son-birthday-in-dubai

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் திருப்பங்களுடனும், விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்த தொடரில் வில்லியாக செம மிரட்டலாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு அழகிய மகன் உள்ளார். பரீனா தான் கர்ப்பமாக இருந்தபோதும் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் பரீனா தனது செல்ல மகனின் முதல் பிறந்தநாளை துபாயில் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அங்கு எடுத்த வீடியோவை அவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.