செம கெத்துதான்! தாமரையை சுற்றி வளைத்து ரசிகர்கள் செய்த காரியம்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!Fans take selfi with thamarai video vir

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்தாவது சீசன் சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

அவ்வாறு போட்டியாளராக களமிறங்கி 95 நாட்கள் மிகவும் சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாடகத் துறையை சேர்ந்த தாமரைச்செல்வி. ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் குழம்பி நின்ற தாமரை பின்னர் உஷாராகி அனைத்தையும் புரிந்து கொண்டு தன்னிச்சையாக, சாமார்த்தியமாக விளையாட துவங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக செல்ல இவரும் ஒரு காரணம் எனலாம். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாமரை அண்மையில் கோவிலுக்கு சென்று திரும்பியுள்ளார். அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் சுற்றி வளைத்து அவருடன் செல்பி எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.