இந்தியா சினிமா

பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவளோ தெரியுமா? அடேங்கப்பா!

Summary:

fans shocked to hear priyanka chopra salary

இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ப்ரியங்கா சோப்ரா. இவர்  இந்தியில் தயாராகும் "பாரத்" படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்குதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேறு எந்த இந்திய நடிகையும் 13 கோடி சம்பளமாக இதுவரை வாங்கியது இல்லை. சல்மான்கான் நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் கதாநாயகர்கள் ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் வாங்குகின்றனர். அவர்களை பிரியங்கா சோப்ரா முந்தி உள்ளார். தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்துக்கு ரூ.12 கோடி வாங்கியதாக தகவல்கள் கூறின. இதுவரை முதல் இடத்தில் இருந்த அவர், இப்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கங்கனா ரணாவத் ரூ.11 கோடி சம்பளம் பெறுகிறார்.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்ட நிலையில், குவாண்டிகோ தொடரின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதன்மூலமே அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகரித்துள்ளதால் அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளதாக பாலிவுட்டில் கூறுகின்றனர். 

பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் இந்தியா வந்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளனர்.


Advertisement