பாவனியை திருமணம் செய்த அமீர்.. மணமேடையில் தாலிகட்டி குங்குமம் வைத்த வைரல் வீடியோ..! ஆடிப்போன ரசிகர்கள்..!!

பாவனியை திருமணம் செய்த அமீர்.. மணமேடையில் தாலிகட்டி குங்குமம் வைத்த வைரல் வீடியோ..! ஆடிப்போன ரசிகர்கள்..!!


Fans shocked by watching bb jodikal promo video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அதுபோல தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். 

இந்த நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் பாவனி. அவர் பிக்பாஸ் வீட்டில் தனது சகபொட்டியாளரான அமீருடன் நெருங்கி பழகிய நிலையில், அமீர் பாவனியை காதலிப்பதாக ப்ரபோஸ் செய்தார்.

இதன்பின் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி வருகின்றனர். பாவனியை அமீர் காதலிப்பதாக தொடர்ந்து கூறி வந்த நிலையில், ஒருநாள் அதே நிகழ்ச்சியில் அமீர் அவருக்கு காதல் பரிசாக மோதிரம் ஒன்றை கொடுத்து அதிர்ச்சியாக்கினார்.

Amir pavni marriage

இந்த நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆஹா கல்யாணம் சுற்று நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட நடனம் ஆட வேண்டும் என்றதால் அமீர் மற்றும் பாவனி நடனமாடியுள்ளனர்.

அப்போது அமீர், பாவனிக்கு தாலிகட்டி நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அப்போ உண்மையாவே கல்யாணமா? என்று அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.