ஷாருக்கான் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்.!

ஷாருக்கான் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்.!


fans-phones-theft-in-sharukh-khan-birthday

இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய 2 திரைப்படங்களும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Sharukh khan birthday

இந்த நிலையில் தற்போது இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் டங்கி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஷாருக்கான் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

Sharukh khan birthday

இந்த நிலையில் ஷாருக்கானை பார்க்க வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் கூட்டத்தில் திருடர்கள் புகுந்து 30க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.