வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயன், பிரசன்னா சண்டை! தக்க பதிலடி கொடுத்த நடிகர் பிரசன்னா!

வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயன், பிரசன்னா சண்டை! தக்க பதிலடி கொடுத்த நடிகர் பிரசன்னா!


fans-critics-actor-prasanna-with-sivakarthikeyan

தனது திறமையாலும், விடா முயற்சியாலும் புகழின் உச்சத்தில் உழவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண ஒரு மிமிக்கிரி கலைஞனாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தில் உள்ளார். இவரது படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாறாக மாறிவிட்டார் நடிகர் சிவா.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து நடிகர் பிரசன்னாவை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். நடிகர் சிவா நடிக்க வருவதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவ்வாறு அவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒன்னு. இந்த தொடரில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் பிரசன்ன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடித்தார் சிவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

sivakarthikeyan

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அந்த நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் ஶ்ரீனிவாசன் என்பவர், “பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது. அவர் சுமாரான நடிகர். இன்னும் அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர்” என்று கூறியுள்ளார்.

அவருக்குப் பதிலளித்த பிரசன்னா, “டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன். இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.