சினிமா

அடேங்கப்பா.. சான்ஸே இல்ல, வேற லெவல்! சூர்யாவையே பிரமிக்க வைத்து, மூக்காலேயே ரசிகர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

Summary:

தமிழ்சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சில தினங்

தமிழ்சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சில தினங்களுக்கு முன்பு தனது 46வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான சூர்யாவின் 40 வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

மேலும் அன்றே அவரது 39 வது படமான ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வித்தியாசமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் விதவிதமான வீடியோக்கள், ஹேஷ்டாக்கை உருவாக்கி இணையத்தை தெறிக்க விட்டனர்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இந்திரஜித் தாவ் என்ற இளம் ரசிகர் சூர்யாவின் புகைப்படத்தை சுவற்றில் தனது மூக்காலே தத்ரூபமாக வரைந்துள்ளார். இந்த வீடியோவினை இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில் அதனை கண்ட சூர்யா நான் பிரமித்து போனதாக தெரிவித்து அதனை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் அந்த இளைஞருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement