சினிமா

பல வெற்றிப் படங்களை கொடுத்த சினிமா பிரபலம் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!

Summary:

பல வெற்றிப் படங்களை கொடுத்த சினிமா பிரபலம் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த ‘பிஸினஸ் மேன்’, ரவி தேஜா நடித்த ‘கிக்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்.ஆர். வெங்கட், சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஆர்.ஆர்.வெங்கட் , சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் தெலுங்கு மட்டுமின்றி ஏக் ஹசினா தி, ஜேம்ஸ் ஆகிய ஹிந்தி படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.ஆர்.வெங்கட் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement