கண்ட இடங்களில் தொட்டு., பொதுஇடத்தில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை.. ரசிகரின் வெறிச்செயலால் அதிர்ச்சி..!!

கண்ட இடங்களில் தொட்டு., பொதுஇடத்தில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை.. ரசிகரின் வெறிச்செயலால் அதிர்ச்சி..!!


famous-mollywood-actress-harassed-by-her-fan

தற்போதைய காலகட்டத்தில் பெண்குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு சார்பாக தகுந்த தண்டனைகள் கொடுத்தபோதிலும் எவ்விதமான பயனும் இல்லை என்று தான் கூற வேண்டும். குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இது சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி நடிகைகளுக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு ஷாப்பிங் மாலில் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக பிரபல மலையாள நடிகை புகார் அளித்துள்ளார். 

அவர் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்றிருந்தபோது, கூட்டத்தில் ரசிகர் ஒருவர் தன்னை தகாத இடங்களில் தொட்டதாக தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளார். அதேபோல் தானும் பாலியல் தொல்லை அனுபவித்ததாக மற்றொரு நடிகையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.  பட்டப்பகலில் பொதுஇடமான ஷாப்பிங் மாலில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.