ஜாலியோ ஜிம்கானா.. இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் உல்லாச நடனமாடிய சர்ச்சை இயக்குனர்..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ..!!

ஜாலியோ ஜிம்கானா.. இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் உல்லாச நடனமாடிய சர்ச்சை இயக்குனர்..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ..!!


famous director dance with actress night party

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் அரசியல், ஆக்ஷன், திரில்லர், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை இயக்குவதில் கைதேர்ந்தவர் என்று கூறலாம். அதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, இவரது படங்கள் எப்பொழுது வெளியானாலும் ஏதாவது ஒரு வகையில் சர்ச்சையை கிளப்பிவிடும். 

Famous director

இதனால் பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று இவருக்கு பெயருண்டு. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் ராம்கோபால், ஏடாகூடமான சில கருத்துக்களால் சர்ச்சையில் சிக்குவார். அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என ஒருவரையும் விட்டு வைத்ததில்லை. 

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் கிளைமாக்ஸ் உள்ளிட்ட 18+ திரைப்படங்களையும் ஓடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம்பிடித்தார். அத்துடன் சிலர் இவரது படத்தில் வரம்புமீறிய ஆபாசம் இருப்பதாக கூறி குற்றமும் சாட்டியிருந்தனர். இதன் பின்னர் சர்ச்சைக்குரிய படங்களை எடுத்துவரும் ராம்கோபால், டேஞ்சரஸ் என்ற லெஸ்பியன் படத்தையும் இயக்கி இருந்தார்.

Famous director

இந்நிலையில் இவர் இரவு பார்ட்டியில் நடிகை இனியா சுல்தானுடன் உல்லாசமாக டான்ஸ் ஆடிய வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள், "இவருக்கு இதே வேலையா போச்சு. எப்பொழுதும் இவர் இருக்கும் இடத்தில் குறைந்தது இரண்டு பெண்களாவது இருக்கணும். அப்போதான் சார் ஹாப்பியா இருப்பாரு" என்று கமெண்ட்களால் விளாசி வருகின்றனர்.