அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"பொன்னியின் செல்வன்,.தி கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்களை பார்க்க பிடிக்கவில்லை" பிரபல நபரின் சர்ச்சையான பேட்டி..
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் வெகு சிலரே. அதில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லெனின் பாரதி.

விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் பெரிதுவில் ஹிட்டாகவில்லை. வசூல்ரீதியாக தோல்வியையே அடைந்தது.
இது போன்ற நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, தனது அடுத்த திரைப்படத்தின் இயக்கத்திற்கான வேலையை ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இப்படம் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதன்படி லெனின் பாரதி சமீபத்தில் அளித்த பேட்டியில், "தி கேரளா ஸ்டோரி, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களை நான் பேட்டி கண்டேன். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் உண்மையான சம்பவம் என்று இயக்குனர் கூறியிருந்தார். புனைவு கதைகளை பார்க்க வேண்டும் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.