வெற்றிப்படங்களை இயக்கி கோடி கோடியாய் சம்பாதித்த பிரபல இயக்குனர்!. தற்போது கோவிலில் பிச்சை எடுக்கும் நிலை!.

வெற்றிப்படங்களை இயக்கி கோடி கோடியாய் சம்பாதித்த பிரபல இயக்குனர்!. தற்போது கோவிலில் பிச்சை எடுக்கும் நிலை!.


famous director begging in temple


தமிழ் சினிமாவில் பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ராஜாக்கள் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர், இயக்குநர் செந்தில்நாதன். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய பூந்தோட்ட காவல்காரன் வெள்ளிவிழா கொண்டாடும் அளவுக்கு வெற்றி திரைப்படமாக ஓடியது.

பல வெற்றி படங்களை உருவாக்கி பல கொடிகளை சம்பாதித்தார். இந்நிலையில் இயக்குநர் செந்தில்நாதன் 2009 ஆம் ஆண்டு "உன்னை நான்" என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அந்த படம் விற்பனையாகாததால் வாங்கிய கடன் வட்டி மேல் வட்டி வந்து அதனை கட்ட முடியாமல் தவித்துவந்துள்ளார்.

director

இதனையடுத்து கடனை அடைப்பதற்காக சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் நடித்துவந்தார். ஒருகட்டத்தில் திடீரென அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனதால் விரக்தியடைந்து தவித்த இவர், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே சென்று கோயிலில் பிச்சை எடுத்துள்ளார்.

இயக்குநர் செந்தில்நாதன் இந்த தகவலை தனது நண்பரிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேன், நான் சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.