பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Famous comedian actor passes away


famous-comedian-actor-passes-away

தமிழ் சினிமா மட்டும் இல்லது இந்திய அளவில் சினிமா துறையினரின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பெங்காலி மொழியில் பிரபல நகைச்சுவை நடிகரான சின்மோய் ராய் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற காமெடியன்களில் சின்மோய் ராயும் ஒருவர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சின்மோய் ராய் கடந்த 1960 முதல் பெங்காலி சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் சின்மோய் ராய்.

Death news

மேலும் இவரது மனைவி ஜூயி பானர்ஜியும் பெங்காலி சினிமாவில் பிரபல நடிகை ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் காலமானார் அவரும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் தன் மகன், மகளுடன் வாழ்ந்து வந்த சின்மோய்க்கு நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் சின்மோய் சிகிச்சை பலனளிக்காமல் சின்மோய் ராய் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.