இந்தியா சினிமா

பிரபல நடிகையிடம் மகள் தெரிவித்த ஒற்றை வார்த்தை.. மாரடைப்பே வந்திருச்சு - நடிகை பகீர் பேட்டி.!

Summary:

பிரபல நடிகையிடம் மகள் தெரிவித்த ஒற்றை வார்த்தை.. மாரடைப்பே வந்திருச்சு - நடிகை பகீர் பேட்டி.!

பாலிவுட் திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகை லாரா தத்தா, தனது மகள் சாய்ரா விவாகரத்து குறித்து பேசியது தொடர்பாக மனம்திறந்து பேசியிருக்கிறார். 

இந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகையாக இருப்பவர் லாரா தத்தா. இவர் கடந்த 2011 ஆம் வருடம் இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2012 ஆம் வருடம் ஜனவரி 20 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சாய்ரா என தம்பதிகள் பெயர் சூட்டினர்.

முன்னாள் பிரஞ்சு அழகியாக இருக்கும் லாரா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், அன்று 4 வயதை எட்டியிருந்த மகள் சாய்ரா தெரிவித்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், சாய்ராவின் 4 வயதில் ஏற்பட்ட விவாகரத்து தொடர்பான பிரச்சனையை தெரிவித்துள்ளார். இதுவே தற்போது வைரலாகியுள்ளது.

சம்பவத்தன்று, பச்சிளம் குழந்தையான சாய்ரா தனது தாயிடம் வந்து, "அம்மா இது என் வீடு, அது உங்கள் வீடு. நான் உங்களை விவாகரத்து செய்துவிட்டேன்" என்று கூறினார். இதனைக்கேட்ட எனக்கோ மாரடைப்பு தான் ஏற்படவில்லை என்ற குறைதான். விவாகரத்து என்னவென்று உனக்கு தெரியுமா? என எனது மகளிடம் நான் வினவினேன். 

அவரோ தெரியாது என்று கூற, நான் இரண்டு நபர்கள் மோசமான திருமண வாழ்க்கையில் ஒத்துழைக்காமல், தனித்தனியாக வாழ்வதே விவாகரத்து என்றேன். உனக்கு இதனை யார் கூறியது என்று கேட்டபோது, அப்பா தான் கூறினார் என்று தெரிவித்தார். மகேஷிடம் மகளிடம் விவாகரத்து குறித்து கூறினாயா? என கேட்க, கணவரோ சிரிக்க ஆரம்பித்துவிட்டார். 

நான் நண்பர்களை பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன். மேலும், மற்றொரு நண்பரின் குடும்ப பிரச்சனை குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, மகள் அரைகுறையாக கேட்டு வந்து உன்னிடம் கூறியிருக்கிறார் என்றும் கூறினார். எனது மகளுக்கு நான் நல்ல தாயாக, நண்பராக இருந்து வருகிறேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்" என்று தெரிவித்தார். 


Advertisement