கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகலாம்..! பிரபல நடிகை ஓப்பன் டாக்.!

கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகலாம்..! பிரபல நடிகை ஓப்பன் டாக்.!


famous-artist-talk-about-pragnant

பாலிவுட்டில் பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை தபு பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இதனையடுத்து விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித் அவர் இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

இதனை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியான இவர், தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம் . வாடகைத் தாய் மூலமாகவும் தாயாகும் வாய்ப்பு உள்ளது.

எனக்கு தாயாக வேண்டும் என தோன்றினால் அந்த முறையை நான் கடைபிடிப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. திருமணம் ஆகாவிட்டால் செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியம் இல்லை. தற்போது எனது நடிப்பு தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். காதலுக்கும் திருமணத்துக்கும் வயதுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்திற்கும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தமில்லை. இந்த காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல என தெரிவித்துள்ளார்.