ரசிகர்களுக்கு சோக செய்தி.. கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை திடீர் மரணம்..! 

ரசிகர்களுக்கு சோக செய்தி.. கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை திடீர் மரணம்..! 


famous-actress-death-by-car-accident

அமெரிக்க நாட்டைச்சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெட்ச் (வயது 53). இவர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது மினி கூப்பர் காரில் சென்று கொண்டிருந்தபோது, லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கினார். 

பின் இந்த தகவலறிந்த தீயணைப்புதுறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

famous actress

அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதுகு பகுதியில் அதிகளவு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மூளையிலும் தீவிர காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உயிர் பிழைப்பது கடினம் என்று குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்திற்கு முக்கிய காரணம் அவர் அதிவேகத்தில் வந்தது எனவும், மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சைபெற்று வந்த அன்னே ஹெட்ச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது பெண் செய்திதொடர்பாளர் ஹாலி பெயர்ட் செய்தியாளர்களிடம் சிலவற்றை கூறியுள்ளார்.

famous actress

அவர் கூறியதாவது, "அன்னேவின் அனைத்து மூளை இயக்கமும் நின்றுவிட்டதாகவும், கலிபோர்னியா சட்டப்படி அவரது இதயம் துடித்துக் கொண்டிருப்பதால் குடும்பத்தினர் உடலுறுப்பு தானமளிக்க தயாராகி வருகின்றனர்" என்று தெரிவித்தார். 

அத்துடன் அவர் மறைந்துவிட்டாலும் அவரது மகன்கள் வழியே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்