தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
"இதெல்லாம் ஒரு போதையா? நான் வேறு போதை காட்டுகிறேன் என்று சொன்ன அண்ணன்!" பிரபல நடிகர் உருக்கம்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருந்தவர் பானுச்சந்தர். இவர் மூத்த இசையமைப்பாளர் வேணுவின் மகனாவார். தமிழில் நீங்கள் கேட்டவை படத்தில் இவர் பாடிய "ஓ வசந்த ராஜா" பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பானுச்சந்தர் தன் திரைவாழ்க்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, "என் அப்பா இசையமைப்பாளராக இருந்ததால் எனக்கும் அதுவே கனவாக இருந்தது. ஆனால் நான் அழகாக இருப்பதாக கூறி என்னை நடிக்க வைக்க சொன்னார்கள்.
என் அம்மாவுக்கும் அதுவே விருப்பமாக இருந்ததால் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அப்போது அங்குதான் ரஜினியும் படித்துக்கொண்டிருந்தார். அதன்பின்னர் என் அப்பாவிடம் சென்று "நான் இசையமைக்கிறேன்" என்று சொன்னேன்.
பின்னர் மும்பைக்கு சென்று போதைக்கு அடிமையானேன். ஒரு கட்டத்தில் என் அண்ணன் அங்கு வந்து "இதெல்லாம் ஒரு போதையா? என்று கேட்டு தற்காப்புக்கு கலைகள் கற்றுக்கொள்ள சொன்னார். அது எனக்கு மேலும் போதையாகிவிட்டது" என்று உருக்கமாக கூறியுள்ளார்.