படப்பிடிப்பின் போது பலத்த காயமடைந்த பிரபல நடிகர்! ICU-ல் அனுமதி.!

படப்பிடிப்பின் போது பலத்த காயமடைந்த பிரபல நடிகர்! ICU-ல் அனுமதி.!


famous actor admitted in hospital

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் மாரி 2 படத்தின் மூலம் தனுஷூக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இதனிடையே அவர் இயக்குனர் வி.எஸ்.ரோஹித் இயக்கும் "கால" படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பிஆர்ஓ நிகில் முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டொவினோ தாமஸ் கால படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைந்து திரும்பவேண்டும் என பதிவிட்டுள்ளார்.