
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி மர்மநபர்கள் பிற நடிகர்களுக்கு மெசேஜ் அனுப்புவது, பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றுவது என தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் செந்தில் தனது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், கடந்த 40 ஆண்டுகாலமாக நான் சினிமாவில் நடித்து வருகிறேன். இந்நிலையில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சிலர் நான் பதிவு செய்ததுபோல் அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள். அவ்வாறு போலியான பதிவுகளை வெளியிட்ட நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கு ட்விட்டர், பேஸ்புக் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு சாதாரண கணக்கே தெரியாது. இதில் டுவிட்டர் கணக்கு எங்கே? என் நண்பர்கள் மூலம் என் பெயரில் யாரோ ட்விட்டரில் போலியான கணக்கை தொடங்கியுள்ளதாக அறிந்தேன் .மேலும் அந்த பக்கத்தில் அவர்கள் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூட கோரிக்கை வைப்பது போன்றும் பதிவிட்டுள்ளார்.
ஆனால் நான் அதை செய்யவில்லை. இதனால் தான் மனஉளைச்சல் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தான் காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement