சினிமா

போலீசாரை அவதூறாக பேசி வெளியான வீடியோ! பிரபல கமல் பட நடிகையின் பெயரில் நடந்த மோசடி! அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

Summary:

பிரபல நடிகை ரவீனா டாண்டன் பெயரில் மர்மநபர் ஒருவர் l போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கி, போலீசை திட்டி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா டாண்டன். இவர் அதனைத் தொடர்ந்து அர்ஜுனுடன் சாது என்ற படத்தில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் பெருமளவில் ஆர்வம் காட்டாத அவர் ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 மேலும் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம். கன்னடம், தெலுங்கு என உருவாகும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரவீனா அடிக்கடி சமூக கருத்துக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.

இந்த நிலையில் ரவீனாவின்  பெயரில் மர்மநபர் ஒருவர் போலி கணக்கை தொடங்கி, அதில் மும்பை போலீசுக்கு எதிராக, அவதூறு கருத்துக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.மேலும் மராத்தி மொழியையும் மராத்தி பேசுபவர்களையும் அவதூறாகக் கூறியுள்ளார். இந்தநிலையில் ரசிகர்கள் பலரும் ரவீனா மீது பெரும் கோபம் அடைந்துள்ளனர்.

 இந்நிலையில் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவீனா இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரவீனா பெயரில் உள்ள போலி டுவிட்டர்  கணக்கு முடக்க்கப்பட்டுள்ளது.

 


Advertisement