சினிமா பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா? ஆனால்...வெளியான ஷாக் தகவல்!!

Summary:

eviction for this week in bigboss house

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக  பிக்பாசால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும். 

இந்நிலையில்10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சாக்‌ஷி  குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளதாகவும், அவரே வீட்டை விட்டு வெளியேறஉள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீக்ரட் ரூமிற்கு அனுப்பப்டலாம் எனவும் கூறப்படுகிறது.


 


Advertisement