சினிமா

ராஜா ராணி சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு பிரபல நடிகையுடன் தொடர்பு! மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார்.

Summary:

Eshwar jayasri

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர். அதேபோல் வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ.

இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது திடீரென அவரது மனைவி ஜெயஸ்ரீ சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் தனது கணவருக்கு வேறு ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பு இருப்பதால் தன்னையும் தனது மகளையும் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துவதாகவும் அதற்கு அவரின் தாயும் உடந்தை எனவும் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ஈஸ்வரனையும் அவரது தாயையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் தவற்றை ஒப்புக் கொண்டுள்ளார். அதனை அடுத்து அவர்கள் இருவரையும் புழல் சிறையில் வைத்துள்ளனர். 


Advertisement