உறியடி விஜயகுமாரின் எலக்சன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்.! போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!!election-movie-got-ua-certificate

சேத்துமான் படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எலக்சன். இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜயகுமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எலக்சனில் இணைந்துள்ள பிரபலங்கள் 

எலக்சன் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படம் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: சாமி பட வில்லன் நடிகரா இது.! தள்ளாடியபடியே வாக்களிக்க வந்த கோட்டா சீனிவாச ராவ்.! வைரல் வீடியோ!!

படக்குழு வெளியிட்ட போஸ்டர்

எலக்சன் திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

 

இதையும் படிங்க: 'நிக்கிறேன்... உங்கள எதிர்த்து நிக்கிறேன்'.! ரசிகர்களை கவர்ந்த எலக்சன் ட்ரைலர்.! எப்படியிருக்கு பார்த்தீங்களா!!