வேட்டி கட்டினா.. நான்தான்டா ஜட்ஜூ! பட்டையை கிளப்பும் எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்! கொண்டாடும் ரசிகர்கள்!!

வேட்டி கட்டினா.. நான்தான்டா ஜட்ஜூ! பட்டையை கிளப்பும் எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்! கொண்டாடும் ரசிகர்கள்!!



edarkum-thuninthavan-movie-trailer-released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். பாண்டிராஜ்  இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ராதிகா, சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் ஆக்ஷன், காமெடி காதல், சென்டிமென்ட், சமூக கருத்து நிறைந்த மாஸ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.