சினிமா

கஷ்டப்படும் சூழலில் அள்ளிக்கொடுத்த லாரன்ஸ்.! வாய் பேச முடியாத பெண்ணின் உருக்கமான நன்றி..! வைரல் வீடியோ.!

Summary:

Dumb women says thanks to actor rahava Lawrence video goes viral

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான மக்கள் வேலை இழந்து, சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல கோடிகள் நிதிஉதவி செய்துள்ளநிலையில், தற்போது கஷ்டப்படும் மக்களுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை உதவியாக வழங்கிவருகிறது.

லாரன்ஸ் வழங்கிய பொருட்களை பெற்றுக்கொண்ட வாய் பேச முடியாத பெண் ஒருவர் நடிகர் லாரன்ஸிற்கு சைகை மொழியில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement