அட.. தாஸ் பட நடிகை இப்போ எப்படியிருக்காரு பார்த்தீங்களா.! அவருக்கு இவ்ளோ பெரிய பிள்ளைகளா.! ஷாக்கான ரசிகர்கள்!!doss-movie-actress-renuka-menon-with-family-photo-viral

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்து பிரபலமாகியுள்ளனர். மேலும் சில காலங்களுக்குப் பிறகு அவர்கள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு மாறிவிடுகின்றனர். அவ்வாறு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர்தான் ரேணுகா மேனன்.

அவர் தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த பிப்ரவரி 14 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனது க்யூட்டான சிரிப்பால், அழகால் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து ரேணுகா மேனன் ஜெயம் ரவியுடன் தாஸ் மற்றும் ஆர்யாவுடன் கலாபக்காதலன் போன்ற படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானார்.

மேலும் அவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.  இந்த நிலையில் நடிகை ரேணுகா மேனன் 2006ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த  சுராஜ் சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். மேலும் அமெரிக்காவில் செட்டிலான அவர் நடன பள்ளி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Doss movie

நடிகை ரேணுகா மேனனுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் தாஸ் படத்தில் நடித்தது போலவே இருக்காரே எனக் கூறி வருகின்றனர்.

Doss movie