நடிகர் வடிவேலுக்கு தேசிய விருது கொடுப்பதே கௌரவம்; மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டிதள்ளிய விக்னேஷ் சிவன்.!!

நடிகர் வடிவேலுக்கு தேசிய விருது கொடுப்பதே கௌரவம்; மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டிதள்ளிய விக்னேஷ் சிவன்.!!


Director Vignesh Shivan Wish for Vadivelu 

 

உதயநிதி ஸ்டாலின், வடிவேல், பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உட்பட பாடல் நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. 

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் குவித்து வரும் நிலையில், பலரும் படத்துக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Director Vignesh shivan

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், "வடிவேலு என்ற மகா கலைஞன் தனது அபார நடிப்பால் திரையில் புது பரிணாமத்தை வழங்கி இருக்கிறார். இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் இவரும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வடிவேலுக்கு மாமன்னன் திரைப்படத்திற்காக தேசிய விருது கொடுப்பதே சிறந்த கௌரவமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.