கடைசியா இது நடந்திருச்சு.! அர்பைஜானில் பிரபலத்துடன் நடந்த சந்திப்பு.! இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த மாஸ் புகைப்படம்!!director-venkat-prabhu-shares-meeting-with-ajith-photos

அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் கொடுத்த திரைப்படம் மங்காத்தா. இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 

மங்காத்தா 

வெங்கட் பிரபு திரைவாழ்விலும் மங்காத்தா திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்திற்கு பிறகு அவர் பிரபலமான இயக்குனராக வலம் வந்தார். தற்போது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் ‘தி கோட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?

அஜித்துடன் வெங்கட் பிரபு சந்திப்பு 

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜர்பைஜான் நாட்டில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “கடைசியாக இது நடந்துவிட்டது. ப்ரொமன்ஸ்” என கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மங்காத்தா 2 எப்போது? என கேள்வியெழுப்பி வருகின்றனர். 

 

 

 

இதையும் படிங்க: கோலிவுட்டில் பரபரப்பு... தளபதி படத்தை தட்டி தூக்கிய தல பட நிறுவனம்.!!