சந்திரமுகி 2 படபிடிப்பில் இயக்குநர் பி. வாசுக்கும், வடிவேலுக்கும் நடந்த வாக்குவாதம்.. சந்திரமுகி 2 படபிடிப்பு நிறுத்தமா.? திடிரென்று வெளியான தகவலால் பரபரப்பு!?

சந்திரமுகி 2 படபிடிப்பில் இயக்குநர் பி. வாசுக்கும், வடிவேலுக்கும் நடந்த வாக்குவாதம்.. சந்திரமுகி 2 படபிடிப்பு நிறுத்தமா.? திடிரென்று வெளியான தகவலால் பரபரப்பு!?


Director vasu argument with vadivelu while chandramugi 2 shooting

கோலிவுட்டில் 2005ஆம் வருடம் வெளியானது சந்திரமுகி திரைப்படம். பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படம் மிகபெரிய ஹிட்டாகி சாதனை படைத்தது.

சந்திரமுகி

இதனையடுத்து, மீண்டும் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் "சந்திரமுகி -2" திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.மேலும் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில், வடிவேலுவுக்கும், இயக்குனர் வாசுவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் வாசு வடிவேலுவை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி

இதன்படி, அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவித கருத்து மோதலும் இல்லை என்றும் இது வெறும் வதந்தியே என்றும் படக்குழு தரப்பில் விளக்கியுள்ளனர். மேலும் மைசூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு நடித்து குடுத்து விட்டார் எனவும், "சந்திரமுகி -2" படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை‌ எட்டியுள்ளது என்றும்‌ கூறியுள்ளனர்.