வந்த இடத்தை மறக்ககூடாது.. பீஸ்ட் இயக்குனர் குறித்து போட்டுடைத்த பிரபல இயக்குனர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!director-udhayakumar-talk-about-nelson

தமிழ் சினிமாவில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சனுக்கு சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்திலேயே நெல்சன் அனைவரின் மனதையும் கவர்ந்து பெரும் வளர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் நெல்சன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, வெற்றிப்பெற வெற்றிப்பெற பணிவு வேண்டும் தலைக்கனம் இருக்கக் கூடாது. இப்போ வரும்போது தம்பி ஒருத்தர் போன் பண்ணினார். அவர் அண்ணே வணக்கம். டைரக்டர் யூனியனில் கார்டு வாங்கிட்டேன்ணே, கார்டு நல்லா சூப்பரா இருக்கு என சொன்னாரு. சரி தம்பி நீ யாருப்பான்னு நான் கேட்டேன்.

nelson

அதற்கு அவர் நான்தான் நெல்சன். இப்போதான் விஜய் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன்னு சொன்னாரு. எவ்வளவு பணிவா இருக்காங்க பாருங்க. நெல்சன் போன்ற இயக்குநர்களை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எந்த இடத்துக்கு போனாலும், வந்த இடத்தை மறந்துவிட கூடாது என கூறியுள்ளார்.