சினிமா

கொரோனாவால் உயிரிழந்த பிரபல இயக்குனரின் கடைசி பதிவு! அப்போ கூட என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!! கண்கலங்கும் ரசிகர்கள்!!

Summary:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ரெட்டைச் சுழி,  ஆண் தேவதை  ஆகிய படங்களையும், சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கிய பிரபல இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

      

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு கடைசியாக ஏப்ரல் 11 அன்று பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை.
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு  விட்டொழிக்கிறேன். 
இனி யாரோடும் பகைமுரண்  இல்லை. யாவரும் கேளிர் என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பதிலளித்துள்ளனர்.


Advertisement