சினிமா

சத்தியமா நாங்க அந்த நோக்கத்துல அந்த வசனத்தை எழுதல! விஸ்வாசம் இயக்குனர் சிவா!

Summary:

Director siva talks about viswaasam movie dialogue

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிவா. கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தற்போது தல அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிவிட்டார் சிவா.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவதாக விஸ்வாசம் படத்தையும் இயக்கியுள்ளார் சிவா. வீரம், வேதாளம் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், விவேகம் படம் படும் தோல்வியை தழுவியது. தற்போது விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

https://cdn.tamilspark.com/media/1632032r-DlSXj9eU8AUq3nq_1545892194__rend_16_9.jpg

அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா நடிப்பில் விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் நடிகர் விஜய் குறித்து ஒரு வசனம் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. அதாவது, அஜித் தனது மகளிடம் இதுவரை எத்தனை போட்டியில் வெற்றி பெற்றுள்ளாய் என்று கேட்பார். அதற்க்கு அவர் 62 போட்டிகள் என்பர். அதற்கு அஜித் அடேங்கப்பா என்பர்.

விஜய் இதுவரை 62 படங்கள் நடித்துள்ளதைத்தான் சொல்கிறார்கள் என பேசப்பட்டது. தற்போது இதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் சிவா, அந்த எண்ணத்தில் நாங்கள் இந்த வசனத்தை வைக்கவில்லை என்றும், விஜய்யை குறித்து நாங்கள் எதுவும் வசனங்கள் எழுதவில்லை, இது எதேச்சையாக நடந்துள்ளது என கூறியுள்ளார்.


Advertisement